வெறும் சைகைதான்; விஜயகாந்தை பார்த்து நொந்துபோன கட்சியினர்

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (16:48 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளின் தலைமை வேட்ளார்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செய்திருப்பவர்களிடம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேற்று நேர்காணல் நடந்தது. 
 
4 தொகுதிகளுக்கு மொத்தம் 400 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நேர்காணலில் விஜயகாந்த் பலரிடம் பேச முயற்சி செய்தாராம். ஆனால், அவரால் பேச முடியவில்லையாம். 
 
வாய் திறந்து எதுவும் பேசாமல் சைகை மூலம் மட்டும் பேசுகிறாராம். இதனை கண்ட கட்சியினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அமெரிக்காவில் சிகிச்சை பின்னர் பழைய விஜயகாந்தாக அவ்ர் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கும் கட்சியினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments