Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

Advertiesment
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்
, புதன், 27 ஜூலை 2016 (13:19 IST)
மக்கள் குடியரசு தலைவர் என போற்றப்படும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் காலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றும். நாடு முழுவதும் அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


 
 
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
அப்துல் கலாமின் நினைவு தினம் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், தமிழக மக்களால் மரியாதைக் குரியவராக போற்றப்படுவருமான ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தால் மாணவர்கள் தினமாக அறிவிக்கப்பட்ட நாள்.
 
நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் முன்னேற்றத்தில் தான் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். தனது வாழ்க்கையை ஆசிரியராக தொடங்கி, பின் விஞ்ஞானியாக இருந்து நம் நாடு போற்றும் ஜனாதிபதியாக வாழ்ந்தவர்.
 
ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றை பின்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். தன் சீரிய சிந்தனையோடு அவர் எழுதிய பல புத்தகங்கள் நம் நாட்டிற்கு கிடைத்த பொக்கி‌ஷங்கள்.
 
உலக அரங்கில் நம் இந்திய நாடு வல்லரசாக வரவேண்டும் என்பதற்காக அவர் கண்ட கனவு, ஆற்றிய உரைகள், பணிகள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. அம் மாமனிதர் நினைவு நாள், ஒவ்வொரு மாணவரும் நினைவு கூறவேண்டிய பொன்னாள். என கூறியுள்ளார் விஜயகாந்த்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் அனுமதி தேவையில்லை : தமிழக அரசு மனு