Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்..! – கண்ணீர் சிந்தும் தொண்டர்கள்!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (12:25 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ள செய்தி அவரது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் அவர் பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார். சமீப காலமாக அவரது உடல்நிலை மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்த செய்தி அவரது தொண்டர்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments