Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதற வேண்டாம் தொண்டர்களே... விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக !

Advertiesment
பதற வேண்டாம் தொண்டர்களே... விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக !
, புதன், 19 மே 2021 (09:29 IST)
விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. 

 
தேமுதிக தலைவர் அவ்வப்போது மருத்துவமனை சென்று உடல்நிலையை பரிசோதனை செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென இன்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. 
 
அதோடு, விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று  தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் தேமுதிக தெரிவித்துள்ளது. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கூறியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கங்கை நதியில் மிதந்த சடலங்கள்… பெட்ரோல் ஊற்றி எரித்த காவலர்கள் சஸ்பெண்ட்!