Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏற்றத்தில் இருந்த விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை.. சரிவு ஏற்பட்டது எப்போது?

ஏற்றத்தில் இருந்த விஜயகாந்த் அரசியல் வாழ்க்கை.. சரிவு ஏற்பட்டது எப்போது?
, வியாழன், 28 டிசம்பர் 2023 (13:28 IST)
கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை விஜயகாந்த் தொடங்கினார். விஜயகாந்த் தலைவராகவும், ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றனர்.
 
கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில் அதாவது 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரது கட்சியினர் யாரும் வெற்றி பெறவில்லை.
 
2009 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 
webdunia
 
அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
 
 
2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. ஆனாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
 
ஆனால் தவறான வழிகாட்டுதலால் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். அந்த அணியின் முதல்வர் வேட்பாளராகவும் விஜயகாந்த்  அறிவிக்கப்பட்டார்.  இந்த தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
 
விஜயகாந்த் அரசியல் வாழ்க்கையின் முதல் வீழ்ச்சி அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இரண்டாவது வீழ்ச்சி மக்கள் நல கூட்டணியுடன் இணைந்தது. அதன்பின் மூன்றாவது வீழ்ச்சி அவரது உடல்நலம் சரியில்லாமல் போனபின் கட்சி அவரது மனைவி பிரேமலதா மற்றும் மச்சினர் சுதீஷ் கட்டுப்பாட்டில் வந்ததும் தான். இனிமேலும் தேமுதிக ஒரு பெரிய கட்சியாக உருவாகுமா? என்பது கேள்விக்குறிதான்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தினாரா விஜயகாந்த்.. ராதாரவி கூறிய உண்மை..!