பெண்களின் வயிறு எரிகிறது: கேஸ் விலை உயர்வு குறித்து விஜயகாந்த்

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (15:22 IST)
கேஸ் விலை உயர்வால் பெண்களின் வயிறு எரிகிறது என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் மூன்று மாநில தேர்தலை ஒட்டி கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்த மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மூலம் அடுப்பை எரிக்கும் பெண்களுக்கு இந்த விலைவாசி உயர்வு வயிற்றெரிச்சல் உண்டாக்கி இருக்கிறது. சிலிண்டர் விலை ஏற்கனவே பல மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களின் தலை மீது சுமையை ஏற்றுவது நியாயமா? 
 
ஏற்கனவே பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது
 
எனவே சிலிண்டர் விலைவாசி உயர்வை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments