ஆவணங்களை அள்ளிச் சென்ற அதிகாரிகள்: தொக்காய் சிக்கிய விஜயபாஸ்கர்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (08:18 IST)
விஜயபாஸ்கர் இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் விஜயபாஸ்கர். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மனைவி மற்றும் பிள்ளைகள் பேரிலும் அதிக சொத்து வாங்கியதாக அவரது மனைவி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
 
காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.27,22,56,736 சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 4.8 கிலோ தங்கம் சிக்கியது. ரூ.24 லட்சம் ரொக்கம், 3.75 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரத்தின் இல்லத்தில்  15 மணி நேரமாக நடைபெற்ற  சோதனையில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் ஆணையத்தின் ’SIR’ தொடங்க சில நாட்கள்.. திடீரென 47 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய மம்தா பானர்ஜி..!

காட்டுப்பாதையில் அமெரிக்காவுக்கு நுழைய முயன்ற 50 இந்தியர்கள்.. கைவிலங்கிட்டு நாடு கடத்தல்..!

வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்..!

சாலையின் நடுவே சாக்கு மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்.. மதுரையில் பரபரப்பு..!

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments