Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? விஜயபிரபாகரன் பதில்!

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (14:03 IST)
திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். 
 
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முயற்சி செய்ததாகவும் ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, தினகரனுடன் கூட்டணி வைத்தது என்பதும் அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சமீபகாலமாக திமுகவுடன் தேமுதிக நெருக்கமாக உள்ளது என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என்றும் தற்போது வரை திமுக ஆட்சி சிறப்பாகவே இருக்கிறது என்றும் கூறியுள்ளார்
 
அவரது பதிலில் இருந்து எதிர்காலத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments