விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறியிருக்கிறது. அந்நிகழ்ச்சி தொடர்பான பல சர்ச்சையான கருத்துகள் மற்றும் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அதில் பங்கு பெறுபவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது. அதேபோல், விஜய் தொலைக்காட்சிக்கு எவ்வளவு லாபம் முதற்கொண்டு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
விஜய் டிவியில் Bigg Boss நிகழ்ச்சி
ரியாலிடி ஷோவில் மிகவும் பிரசித்தமான கான்செப்ட் இது!
என் எஸ்டிமேட் சரியென்றால் விஜய் டிவியின் வியாபாரம் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்!
ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.
மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி
மொத்த செலவு ₹110 கோடி
விளம்பரம் மட்டும் 30 வினாடிக்கு ₹ 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி
மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்!
அம்மாடியோவ்.....
கிராமத்தில் வேலை இல்லாதவற்கு நூறுநாள் வேலைத்திட்டம் மிகமிக குறைந்தபட்சம் தினம் நூறு ரூபாய் முதல் கமிஷன் லஞ்சம் போக கிடைக்கும். இவர்கள் நாட்டுமக்களுக்காக அந்தந்த கிராமங்களில் சேவையாக செய்கிறார்கள்...
ஆனால் வேலையில்லா சினிமா பிரபலங்களுக்கு நூறுநாள் பிக்பாஸ்... பரிசுத்தொகை ஒவ்வொருவாரம் வெளியேறுபவருக்கு பல லட்சங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள்....
இந்த நிகழ்ச்சியால் மொத்த தமிழ்நாட்டிலும் உள்ள மக்கள் தினம் ஒருமணிநேரம் வேலையற்று இருப்பதுடன் பிபீ சுகர் பிரஷர் ஏறி வீட்டிலிருப்பவருடன் சண்டை சச்சரவு செய்து அடுத்தவர்களுக்கும் பிபீ பிரஷர் சுகர் உண்டாக்கிடும்....
இதுதான் சமத்துவ நாடா?.......
வாழ்க வளமுடன் (விஜய்டிவி மட்டும்...) மற்றவர்கள் நாசமாகபோனால் அவர்களுக்கென்ன.....??” என அந்த செய்தியில் குறிப்பிடப்படுள்ளது.