Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் இயக்கத்தில் எஸ்.ஏ.சியின் ஸ்லீப்பர்செல்கள்!? – விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (09:50 IST)
நடிகர் விஜய் பெயரில் அவரது தந்தை கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது இயக்கத்தில் உள்ள எஸ்.ஏ.சி விசுவாசிகளை குறித்து விஜய் தகவல் சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக அரசியலுடன் தொடர்புபடுத்தி நடிகர் விஜய் பேசப்பட்டு வந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இந்நிலையில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி விஜய் பெயரில் கட்சி தொடங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிட்ட நடிகர் விஜய் தனது அப்பாவின் கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லையென்றும், தனது ரசிகர்கள் அதில் இணைய வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது விஜய் மக்கள் நற்பணி இயக்கத்தில் மாவட்ட பதவிகள், உயர்பதவிகளில் உள்ள சிலர் எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விஜய் ரசிகர்களை கட்சியில் இணைக்க ரகசியமாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளில் தனக்கு மிகவும் விசுவாசமான 50 நபர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய் புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர்செல் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் தகவல்கள் சேகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments