பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (12:45 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்க இருப்பதாகவும், அதற்காக காவல்துறை அனுமதி கேட்டு மனு செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஏகனாபுரம் கிராம மக்களை விஜய் சந்திக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் பரந்தூரில் உள்ள மக்களை சந்திக்க வரும் விஜய்க்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க இரண்டு இடங்களை காவல்துறை ஒதுக்கி உள்ளது. அந்த இரண்டு இடங்களில் எங்கு பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் அவர் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது என்றும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments