இஸ்லாமிய சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.. விஜய் அறிக்கை

Siva
திங்கள், 15 செப்டம்பர் 2025 (21:35 IST)
இஸ்லாமிய சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று, முக்கியமான புதிய திருத்தங்களை நிறுத்தி வைத்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் வாயிலாக நமது இஸ்லாமியச் சொந்தங்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்சநீதிமன்றம்.
 
அரசியலமைப்பின் மாண்பைக் காக்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நீதி, சமத்துவம் மற்றும் மதச் சுதந்திரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. இது, இந்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய மக்களின் குரலாக ஒலித்த தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கும் இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
 
இந்த வெற்றியை அடைவதற்காகத் தங்களின் அளப்பரிய பங்களிப்பை அளித்த நம் சட்ட வல்லுனர் குழுவிற்கு நமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments