Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொழப்ப பார்ப்பதா வங்கிகள் முன் நிற்பதா: விஜய் சேதுபதி வேதனை!

பொழப்ப பார்ப்பதா வங்கிகள் முன் நிற்பதா: விஜய் சேதுபதி வேதனை!

பொழப்ப பார்ப்பதா வங்கிகள் முன் நிற்பதா: விஜய் சேதுபதி வேதனை!
, செவ்வாய், 15 நவம்பர் 2016 (09:43 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை வங்கியில் கொடுத்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டது. இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் கால் கடுக்க நீண்ட நேரம் நிற்கின்றனர்.


 
 
கையில் பணம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பரவலாக பொதுமக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் விஜய் சேதுபதி இந்த 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து பேட்டியளித்தார்.

நன்றி: News7
 
இது குறித்து கூறிய அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நகரப்புறங்களில் வசிப்பவர்களை விட கிராம மக்களே அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்றார். தினமும் வேலை செய்தால் தான் தங்கள் பொழப்பு என்ற நிலையில் உள்ளவர்கள் வேலைக்கு போவதா அல்லது இதை மாற்ற உட்காருவதா என கேள்வி எழுப்பினார்.
 
வங்கிகளின் முன் நிற்கும் கூட்டத்தை பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கு என கூறிய அவர் இதெல்லாம் ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியா இருந்தால் சந்தோஷம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவை வீட்டில் சென்று சந்திப்பேன்: பல்டி அடித்த விஜயகாந்த்!