தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யின் தமிழக வெற்றி கழகம் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவல் வதந்தி என்பது இன்றைய அதிரடி அறிவிப்பின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் சேர்த்து கொள்ளப்படும் என்பது மறைமுகமாக இந்த அறிவிப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.