இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

Siva
செவ்வாய், 15 ஜூலை 2025 (08:04 IST)
அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று சமீபத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் விஜய் கேட்ட கேள்விகள் அனைத்துமே மிகவும் சரியானவை என்றும், "24 லாக்கப் டெத் மரணத்திற்கு, 24 குடும்பங்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று விஜய் கூறியது சரியான வாதமே என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
 
மேலும், அவரது பேச்சில் எந்த இடத்திலும் வெறுப்புப் பேச்சு இல்லை என்றும், நாகரீகமான அரசியல் செய்கிறார் என்றும் மணி பாராட்டினார். "அதுமட்டுமின்றி, கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த தவறை நீங்களே சரி செய்துகொள்ளுங்கள்" என்று அவர் முதல்வருக்கு ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் பேசினார். 
 
"அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது" என்று பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் வெறுப்புப் பேச்சுடன் கூடிய விமர்சனம் செய்து வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நாகரிக அரசியல்வாதியை பார்க்கிறோம் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments