‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை ஆற்றில் வீசிய அரசு ஊழியர் கைது: என்ன நடந்தது?

Siva
ஞாயிறு, 14 செப்டம்பர் 2025 (11:05 IST)
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமின் கீழ் பெறப்பட்ட பொதுமக்கள் மனுக்களை வைகை ஆற்றில் வீசிய வழக்கில், நில அளவை ஊழியர் முத்துக்குமரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சமீபத்தில், திருப்புவனத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. ஆனால், கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி இந்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன
 
இதுகுறித்த விசாரணையில், அரசு ஆவணங்களை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குமரன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சக ஊழியர் ஒருவரின் மீது இருந்த கோபத்தின் காரணமாக, அவரை சிக்கவைக்கும் நோக்கில் இந்த மனுக்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம், அரசு பணியாளர்களுக்கிடையிலான தனிப்பட்ட பகையால், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய முக்கியமான ஆவணங்கள் எவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளன என்பதை காட்டுவதாக உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments