Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

Advertiesment
விஜய்

Mahendran

, வியாழன், 31 ஜூலை 2025 (15:50 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் தனது கட்சியில் உறுப்பினராகச் சேர்வதற்காக 'MY TVK' என்ற செயலியை அறிமுகம் செய்த நிலையில், இந்த செயலியில் ஒரே நாளில் மூன்று லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும் பெண்களே உறுப்பினர்களாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த செயலி மூலம் கட்சியில் ஆர்வமுடன் பொதுமக்கள் பலர் இணைந்து வருவதாகவும், கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
'MY TVK' செயலியின் தொழில்நுட்ப வசதி குறித்து கூறுகையில், ஒரு நொடிக்கு 18 உறுப்பினர்கள் சேர வசதி செய்யப்பட்டுள்ளது. இது உறுப்பினர் சேர்க்கையை அதிவேகமாக மேற்கொள்ள உதவுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள பூத் நிர்வாகிகளை விஜய் நேரடியாகக் கண்காணித்து அறிவுரை வழங்கவும் இந்தச் செயலியில் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த ஆரம்பகட்ட வெற்றி, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் செயல்பாடுகளுக்கும், உறுப்பினர் பலத்திற்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!