Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

Siva
வியாழன், 19 ஜூன் 2025 (07:14 IST)
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் மாயவன், சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்ததால், தங்கள் சங்கத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் இரண்டாக உடைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், உயர்நிலைப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் குறைந்தது ஏழு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தங்கள் சங்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகவும், இந்த கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஆனால், அரசின் நிதி நிலைமையை காரணம் காட்டி, இதுவரை எந்த கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை என்று மாயவன் வருத்தம் தெரிவித்தார். நான்கு ஆண்டுகளாக போராடியும் எந்த பலனும் இல்லை என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது.
 
தங்கள் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் மேலும் வலு சேர்க்கும் நோக்கில், ஆளுங்கட்சிக்கு எதிர் நிலையில் செயல்படும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை சந்திக்க முடிவு செய்ததாகவும், அதன்படி கடந்த ஜூன் 13-ம் தேதி அவரை சந்தித்ததாகவும் மாயவன் கூறினார். "எங்கள் பிரச்சனைகளையெல்லாம் விஜய் பொறுமையாக கேட்டதுடன், நாங்கள் நடத்தும் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்," என்றார் மாயவன்.
 
இந்தச் சந்திப்பு, ஆளுங்கட்சிக்கும், குறிப்பாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாயவன் கருதுகிறார். "ஆசிரியர்களின் மொத்த ஆதரவையும் திமுக இழந்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால், எங்கள் சங்கத்தை பிளக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
ஏற்கனவே சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சிலர், சங்க நிர்வாகிகள் சிலர் நடிகர் விஜய்யை ஒருதலைப்பட்சமாக சந்தித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறி சங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். "கோரிக்கைகளை அரசுதான் நிறைவேற்ற வேண்டும். அதற்காக அரசைத்தான் முறையாக அணுக வேண்டுமே தவிர, இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்வது போல, நடிகர் விஜய்யை சந்தித்தது எங்களுக்கு பிடிக்கவில்லை; அதனால், சங்கத்தை விட்டு வெளியேறுகிறோம்," என்று கூறி அவர்கள் பிரிந்து சென்றனர்.
 
இந்தச் சூழ்நிலையில், பிரிந்து சென்ற அந்த நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்துள்ளனர். மேலும், அவர்கள் புதிதாக ஒரு சங்கத்தை தொடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. "கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தன்னுடைய துறையை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு, ஆசிரியர் சங்கங்களை பிளவுபடுத்தும் வேலையைத்தான் அதிகம் செய்கிறார்," என்று மாயவன் சாடினார். 
 
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் வரை ஆசிரியர்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments