Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், இந்தியாவின் முக்கியமான நடிகர்- அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (16:01 IST)
தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது,  நடிகர் விஜய்யின் புகைப்படத்தக் காண்பித்து அவரைப் பற்றி கூறும்படி கேட்டுக் கொண்டனர்.

இதற்கு  அண்ணாமலை’ ‘’இவரது முதல் படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் நடிக்கத் தெரியாது. நடனமாடத் தெரியாது அவருக்கு…ஆனால், இன்றைக்கு இந்தியாவினுடைய முக்கியமான  நடிகர்  விஜயைப் பாராட்டினார்.

ஒரு மனிதன் தன் சுய முயற்சியில் கடின உழைப்பில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சினிமாவை பொருத்தவரை  நடிகர் விஜய் ஒரு உதாரணம் என்று கூறினார்.

மேலும், அவரது முதல் படம் எனக்கு ஞாபகம் இருக்கு..அவர் கேமரா முன்  நிற்பதற்கு கூச்சப்பட்டார். நாமெல்லாம் இருக்கிற மாதிரி. இன்று அதெல்லாம் தாண்டி இன்று ஒரு  மெகா ஸ்டாராக உருவாகியுள்ளார் என்பது எளிதான பயணமல்ல. இன்று சமுதாய விஸயங்களைப் பேசியுள்ளார். இன்னும்  ஆழமாக தீர்க்கமாக நிறைய பேச வேண்டுமென்பது எங்களைப் போன்றோரின் எதிர்பார்ப்பு’’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments