Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

Advertiesment
Arjun Sambath

Senthil Velan

, வியாழன், 4 ஜூலை 2024 (14:07 IST)
நடிகர் விஜய், மத்திய அரசை, ஒன்றிய அரசு எனப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டதாகவும் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.
 
3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சி வழக்கறிஞர்கள் போராட்டத்தை தூண்டி விடுவது, நீதிமன்றப் பணிகளைப் புறக்கணிப்பது, தவறான கருத்துக்களைத் தொடர்ந்து பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இந்த சட்ட விரோதப் போராட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் என்று விமர்சித்த அவர், இப்படித்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘லஞ்ச ஊழலை ஒழிப்பேன்’ எனக் கூறி வந்தார் என்றும் ஆனால் தற்போது திமுகவுக்குப் பிரச்சாரம் செய்கிறார் என்றும் குறிப்பிட்டார். அதுபோல நடிகர் விஜய் வீராவேசமாக தமிழக வெற்றிக் கழகமாக புறப்பட்டார். ஆனால் அவரும் இன்னொரு கமல்ஹாசனாகி விட்டார் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
 
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அடுத்ததாகத் திரைப்படம் வெளி வர வேண்டி உள்ளது என்றும் அந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு திமுகவினர் சில நிர்ப்பந்தம் அளித்ததால், நீட் தேர்வு தொடர்பாக திமுகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என்றும் அவர் கூறினார். 

 
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய், மத்திய அரசை, ஒன்றிய அரசு எனப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யாவைப் போல விஜயும் விரைவில் மாறிவிடுவார் என அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!