Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது வேற வாய் இது நாற வாய்... ஜில் ஜங் ஜக் சீமானை வச்சி செய்யும் விஜய் பேன்ஸ்!!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:25 IST)
விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 
 
இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியல் கட்சி தொடங்க பயப்பட வேண்டும்” என பேசினார். 
சீமானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் விஜய் பற்றி பேசியதால் கொந்தளித்துப்போன விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 
 
குறிப்பாக மதுரை மற்றும் தேனியில் சீமானை வண்மையாக கண்டிக்கிறோம் என விஜய் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அரசியல் நடிகன் சீமான் என்றும் சீமானுக்கு தளபதியை பற்றி பேச தகுதி இல்லை என்றும் சீமான் மன்னிப்பு கேட்டாக வேண்டும் போஸ்டர்களை ஒட்டியுள்ளானர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments