வீட்டில் இருந்து விஜய் பேச்சை உன்னிப்பாக கேட்டு ரசித்த முதலமைச்சர்.. ஆதரவு தருவாரா?

Mahendran
திங்கள், 28 அக்டோபர் 2024 (13:03 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மாநாட்டில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிய நிலையில், அவரது பேச்சு குறித்த வீடியோக்கள் மற்றும் கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நேற்று முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் செய்திகள் தான் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், இன்று அவருடைய பேச்சு குறித்தும் அவரை விமர்சனம் செய்தும் பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் வீட்டில் உட்கார்ந்து விஜய் பேசுவதை தொலைக்காட்சியில் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவரிடையே நல்ல நட்புறவு இருக்கும் நிலையில், புதுவையில் தமிழக வெற்றி கழகத்துடன் ரங்கசாமியின் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments