Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி- எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி-  எடப்பாடி பழனிசாமி
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (20:13 IST)
சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

''இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர். எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா?'' -வானதி சீனிவாசன்