Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்

Prasanth Karthick
திங்கள், 21 அக்டோபர் 2024 (13:28 IST)

பிரபல யூட்யூபரான இர்பான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

 

யூட்யூபில் பிரபல Food Vloggerஆக இருப்பவர் இர்பான். இவருக்கு ஏராளமான ஃபாலோவர்கள் உள்ள நிலையில் சமீபமாக அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களையும் அழைத்து வீடியோ வெளியிட்டு மேலும் புகழ்பெற்றார்.

 

ஆனால் புகழ்பெற்ற அளவுக்கு தற்போது சர்ச்சைக்கும் உள்ளாகி வருகிறார் இர்பான். முன்னதாக கார் விபத்து ஏற்படுத்தியது, தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளியிட்டது உள்ளிட்டவற்றால் இர்பான் சர்ச்சையில் சிக்கினார்.

 

இந்திய சட்டப்படி கருவில் உள்ள குழந்தையின் பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்துவது தவறு என்பதால் இந்த விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோவை நீக்கினார். 
 

ALSO READ: தீபாவளிக்கு சொந்த காரில் செல்பவர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்: அமைச்சர் அறிவுரை..!
 

இந்நிலையில் தற்போது தனது மனைவிக்கு பிரசவம் நடக்கும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்பான். குழந்தை பிறக்கும்போது அதன் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் பகிர்ந்திருந்தார்.

 

ஆனால் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூட்யூபர் இர்ஃபான்

தீபாவளிக்கு 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! எங்கேயிருந்து புறப்படும்? - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

தீபாவளிக்கு சொந்த காரில் செல்பவர்கள் மாற்று வழியை பயன்படுத்துங்கள்: அமைச்சர் அறிவுரை..!

திருப்பதி விஐபி தரிசனத்திற்கு ரூ.65,000 லஞ்சம்.. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் மீது வழக்குப்பதிவு..!

சீமான் தங்கியிருக்கும் ஓட்டல் முன் குவிக்கப்பட்ட போலீஸ்.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்