Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’டிக்டாக் ’ வீடியோ விபரீதம்... இளைஞர் வெட்டிக் கொலை !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:28 IST)
துத்துக்குடியில்  கோயிலை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு இளைஞர் கொலை செயப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள மாதா நகரில் வசித்து வருபவர் ரவி. இவர் திமுக கிளைச் செயலாளராகவும் இருப்பதுடன்,  அங்குள்ள சந்தன மாரியம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாகவும் பதவி வகித்து வந்தார்.
 
இந்நிலையில் அந்தக் கோயிலின் பொருளாளரான ரத்தினகுமாருக்கும் ரவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், இருவரும் இரு கோஷ்டிகளாக இருந்தனர்.
 
இந்த நிலையில், ரத்தினகுமாரின் நண்பர் செல்வம் வீட்டின் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அப்போது, அவர் வீட்டுக்கு அருகே ரவியின் நண்பரான பார்த்த சாரதியின் பைக் நிறுத்தபட்டிருந்தது.
 
அதனைப் பார்த்த செல்வம் அதை செல்போனில் படம் எடுத்து டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இந்த பிரச்சனையில் 4 பேர் கொண்ட கும்பல் செல்வம், முத்துக்குமார், முத்துச் செல்வம் ஆகிய மூவரையும் கத்தியால் குத்தி தப்பித்துச் சென்றுவிட்டனர்.
 
காயமடைந்தவர்களை தூத்துக்குடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது செல்வம் உயிரிழந்தார். 
 
இதுசம்பந்தமாக, பார் ரவி, பார்த்த சாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரவி , இசக்கி முத்துவை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டுமென  செல்வத்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்