Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்: சஞ்சய் ராய் சகோதரி

Siva
ஞாயிறு, 19 ஜனவரி 2025 (09:44 IST)
கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என அவர் சகோதரி பேட்டி அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.

இந்த வழக்கில் 50 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில், சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சஞ்சய் ராயின் சகோதரியை செய்தியாளர்களை சந்தித்தபோது, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும், சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி, அவர் தண்டிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

சஞ்சய் ராய்க்கு நாளை மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அறிய நாடு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்