Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

80வது பிறந்த நாளை கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தி....

Advertiesment
Vennira aadai
, வியாழன், 5 ஜூலை 2018 (14:23 IST)
காமெடி நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தனது 80வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார்.

 
1965ம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமானவர் மூர்த்தி. இப்படத்தில்தான் ஜெயலலிதா மற்றும் நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். எனவே இப்படத்தின் தலைப்பு மூர்த்திக்கும், நிர்மலாவுக்கும் நிலைத்துப் போனது.
 
குணசித்திர வேடத்தில் நடித்து வந்த மூர்த்தி ஒரு கட்டத்தில் காமெடிக்கு தாவினார். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட மூர்த்தி ரசிகர்களை கவர்ந்தார். ’ஏண்டா மூதேவி. நீ திருந்தவே மாட்டியா?” என்கிற இவரின் புகைப்படத்தோடு கூடிய வாசகம் இப்போதும் முகநூலில் புகைப்பட கமெண்டாக நெட்டிசன்களால் பயன்படுத்தப்படு வருகிறது.
 
100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மூர்த்தி தன்னுடன் நடித்த நடிகை மணிமாலாவை திருமணம் செய்து கொண்டார். முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகியிருக்கும் அவர் சமீபத்தில் தனது 80வது பிறந்த நாளை தனது மனைவியுடன் கொண்டாடினர். அவருடன் பல படங்களில் நடித்த நடிகை சச்சு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன ஆச்சர்யம்! மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ