Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திட்டமிட்டே நாடகமாடுகிறாரா மதன்? -திடுக் தகவல்கள்

Advertiesment
திட்டமிட்டே நாடகமாடுகிறாரா மதன்? -திடுக் தகவல்கள்
, வெள்ளி, 3 ஜூன் 2016 (13:52 IST)
பிரபல வேந்தர் மூவிஸ் பட நிறுவனத்தை நடத்தி வந்தவர் மதன்.  இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 15 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாயும்புலி உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நிறுவனம் சார்பாக வெளியிட்ட படங்கள் பெரிதாக வரவேற்பில்லை. இதனால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தில் தவித்து வந்தார் மதன்.
 


இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி அன்று மதன் தான் கங்கையில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு மாயமானார். வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பாரிவேந்தர் மீதான தனது மரியாதையையும், சிலர் பரப்பிய அவதூறு காரணமாக அவர் மதனை புறக்கணிப்பதையும், பல கோடிகள் பாரிவேந்தருக்கு உதவி செய்ததையும் மதன் குறிப்பிட்டுள்ளார். இனியொரு ஜென்மமே வேண்டாம் என்று காசியில் சமாதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கடிதம் அவரால் எழுதப்பட்டதுதானே என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த கடிதம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து மதனை கண்டுபிடிக்க அவரது நண்பர்கள் தீவிர முயற்சி எடுத்தனர். இதில் ஒரு பிரிவினர் காசிக்கு புறப்பட்டு சென்றனர். அதில் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவு மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் அடக்கம். அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது இரு மனைவிகளும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.  

அவர் காணமல் போய்  இதுவரை 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை அவர் எங்கிருக்கிறார்? என்ன ஆனார் என்று தெரியவில்லை. காணமல் போன அன்று அவர் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்றுள்ளார். அந்த கார் தற்போது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விசாரணையில் அவர் விமானம் மூலம் டெல்லி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மதன் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல காசிக்கு சென்று வாரணாசி கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

இதனையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் போலீசார்  5 படகுகள் மூலம் மதனை தேடி வருகின்றனர். இதற்கிடையில் அவர் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கூறி பல கோடி மோசடி செய்துள்ளார் என்ற தகவலும் வெளியானது. இதுவரை 5 பேர் போலீசாரிடம் புகார் செய்துள்ளார்கள். எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம் சார்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மாயமான மதன் கூலிப்படையினரால்  காசிக்கு கடத்திச் செல்லப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரிடம் பணம் கொடுத்த ஏமாந்த சிலர் மதனை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் கடைசியா யார் யாரிடமெல்லாம் பேசினார் என்பதை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

மதன் விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதால் சினிமா வட்டாரங்கள்,அவரது நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

மதன் காணாமல் போய் இன்றுடன் 6 நாட்கள் கடந்திவிட்ட நிலையில் அவர் குறித்து சில வதந்திகள் பரவி வருகின்றன.  அதாவது மதனுக்கு ஏற்கெனவே இரு மனைவிகள் உள்ள நிலையில், அவருக்கு இன்னும் இரண்டு மனைவிகள் உள்ளனர் என்றும், அதில் நான்காவது மனைவியான சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் தில்லி சென்று அங்கிருந்து  வாரணாசி சென்றுள்ளார் என்றும்,பின்னர் அங்கிருந்து அவர் வெளிநாடு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்காக அவர் தங்க நகைகள்,ரொக்கப் பணம் ஆகியவற்றை பெட்டியில் எடுத்துச் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நாடகத்தை அவர் திட்டமிட்டே அறங்கேற்றியுள்ளார் என்றும் திரையுலகைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தகத்தை காப்பி அடித்தாரா தா.பாண்டியன்? - எழுத்தாளர் பரபரப்பு புகார்