மருத்துவ சீட் மோசடி வழக்கில் வெகு நாட்களாக தேடப்பட்டு கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
மருத்துவ சீட் வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுப்பட்ட மதன் தலைமறைவானதை அடுத்து வெகு நாட்கள் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும் ரூ.10 கோடி தொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மதன் தரப்பில் நிபந்தனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.