Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய கூட்டாளி கைது

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (10:39 IST)
பண மோசடி விவகாரத்தில் ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் நிறுவன் அதிபர் மதன் கூட்டாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
 

 
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.
 
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகவும், மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
 
இதுதொடர்பாக கடந்த ஒரு மாதமாக மதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் மதனின் முக்கிய கூட்டாளி என்று கருதப்படும் விஜய் பாண்டியனை காவல்துறையினர் வியாழனன்று கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலை.. அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட அமெரிக்கா..!

2025-2026-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது? தொடக்க கல்வி இயக்குநர் தகவல்..!

இந்தியாவில் வெளியானது Realme P3 Pro மற்றும் Realme P3x 5G! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவிடம் நிறைய பணம் இருக்கிறது. 21 மில்லியன் டாலர் ஏன் கொடுக்க வேண்டும்: டிரம்ப்

கும்பமேளா நீட்டிக்கப்படாது: பிரயாக்ராஜ் கலெக்டர் திட்டவட்ட அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments