Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Farewell கொண்டாட அனுமதி மறுப்பு; வகுப்பறையை துவம்சம் செய்த மாணவர்கள்!

Schools
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (15:17 IST)
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஃபேர்வெல் விழா கொண்டாட அனுமதி தராததால் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வகுப்பறை ஒன்றில் செய்முறை தேர்வு நோட்டு எழுதாத மாணவர்களை ஆசிரியர் கண்டித்தப்போது அதில் ஒரு மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அந்த மாணவன் சில நாட்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டான்.

இந்நிலையில் தற்போது அதுபோல அதிர்ச்சிகரமான மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று அந்த பள்ளியில் +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து கிளம்ப உள்ளதால் நிறைவு மற்றும் வழியனுப்பு விழா நடத்த மாணவர்கள் அனுமதி கேட்ட நிலையில் பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் சிலர் நேற்று ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த மேசை, நாற்காலிகளை அடித்து உடைத்து கலவரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் இன்று பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் மாணவர்களுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். மாணவர்கள் வன்முறை செயலில் ஈடுபடும் இந்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Budget விலையில் அறிமுகமான Moto G52 - விவரம் உள்ளே!