Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்தால் போராட்டம் வெடிக்கும் – வேலூர் மக்கள் எதிர்ப்பு !

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (15:09 IST)
வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுக்க அம்மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியோ தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நவம்பர் மாதம் வரைக் கையிருப்பு உள்ளது. தண்ணீர்ப் பஞ்சம் என்பது எதிர்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி எனக் கூறி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளார். 

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் ’தமிழகத்துக்கு சீராக தண்ணீர் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னைக்குக் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சுமார் 10 மில்லியன் லிட்டர் குடி தண்ணீரைக் கொண்டுவருவதற்காக தனியாக 65 கோடு ரூபாய் ஒதுக்கியுள்ளார்’ என அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர்

ஆனால் ஜோலார் பேட்டையில் இருந்து நீர் எடுக்க அம்மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வரும் நீரை ஆந்திர அரசு தடுத்துவிட்ட நிலையில் ஆற்றில் தேங்கியிருக்கும் நீரையும் சென்னை மக்களுக்காக கொண்டு சென்று விட்டால் வேலூர் மாவட்ட மக்கள் தண்ணீருக்கு அவதிப்படும் நிலை உருவாகும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments