Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுபோதையில் மகனையே சுட்ட முன்னாள் ராணுவ அதிகாரி!

Advertiesment
மதுபோதையில் மகனையே சுட்ட முன்னாள் ராணுவ அதிகாரி!
, வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:21 IST)
வேலூர் அருகே குடிபோதையில் சொந்த மகனையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவர் ஒரு ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வந்து தனது மகன் வினோத்திடம் தகராறு வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்றும் சுப்ரமணி குடித்துவிட்டு வரவே வினோத்துக்கும்  அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டுள்ளார் சுப்ரமணி. இதனால் பயந்துபோன வினோத் தந்தை தற்கொலைதான் செய்யப் போகிறாரோ என்ற அச்சத்தில் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவைத் திறந்த அவர் தன்னுடைய துப்பாக்கியால் வினோத்தை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வினோத் உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டதும் அவர்கள் விரைந்து சுப்ரமணியைக் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!