Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தோற்றால் அதிமுகவே இருக்காது: கடும் ஆத்திரத்தில் ஏ.சி.சண்முகம்?

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (19:16 IST)
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவிட்ட நிலையில் மீண்டும் அதிமுக கூட்டணியின் சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும் போட்டியிடுகின்றனர். வேலூரில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என இரண்டு தரப்பினர்களும் பணத்தை தண்ணீராக செலவு செய்ய முடிவு எடுத்துவிட்டதாக தெரிகிறது
 
இந்த நிலையில் திடீரென முதல்வர் தரப்பும், துரைமுருகன் தரப்பும் நெருக்கம் காட்டி வருவதாக ஏ.சி.சண்முகத்திற்கு ரகசிய தகவல் வெளிவந்துள்ளதாம். இதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட அதிமுக அரசை துரைமுருகன் கடுமையாக விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது
 
மக்களவை தேர்தலின்போது அதிமுக தலைமை குறிப்பிட்ட மூன்று தொகுதிகளுக்கு ஏ.சி சண்முகம் கணிசமாக செலவு செய்தாராம். ஆனால் தற்போது தன்னுடைய வெற்றிக்காக அதிமுக ஒன்றுமே செய்யவில்லை என்று ஏ.சி.சண்முகம் தரப்பினர் அதிருப்தியில் உள்ளார்களாம்.
 
ஏ.சி.சண்முகம் தனது ஆதரவாளர்களிடம், 'நான் தோற்றால், வேலூரில் அ.தி.மு.க-வே இருக்காது’ என்று கொந்தளித்து வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments