Publish Date: Tue, 26 Sep 2023 (08:00 IST)
Updated Date: Tue, 26 Sep 2023 (08:02 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதும் இதனால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதை அடுத்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இருப்பினும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அதேபோல் கல்லூரிகளும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.