அடுத்து 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு!!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:46 IST)
சென்னையில் இன்னும் 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் என கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்வை சந்தித்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விலை உயர்ந்தது. நேற்று இதன் விலை ரூ.70 ஆக இருந்தது. தக்காளி மட்டுமின்றி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 
 
தொடர் மழையினால் காய்கறிகள் நீரில் மூழ்கி அழுகி போனதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது என்றும் இதனால் இன்னும் பத்து நாட்களுக்கு  காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு  விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னால் முட்டாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.. அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

முன்னாள் பெண் டிஜிபி ஸ்ரீலேகா மீது போக்ஸோ வழக்கு: என்ன நடந்தது?

அமைச்சரவை கூட்டத்திற்கு வர முடியாது: மெசேஜ் அனுப்பிய அதிகாரி 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட்

மைசூர் சில்க் உற்பத்தியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: முதலமைச்சர் சித்தராமைய்யா தலையிட கோரிக்கை..!

2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற திமுக நிர்வாகி கைது! கிருஷ்ணகிரியில் பயங்கரம்:

அடுத்த கட்டுரையில்
Show comments