நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள்! எந்த தொகுதியில் தெரியுமா?

Sinoj
சனி, 23 மார்ச் 2024 (23:00 IST)
நாம் தமிழர் கட்சியில் இன்று அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளரை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், இம்முறையில் தனித்துப்போட்டியிடும்  நாம் தமிழர் கட்சியில் இன்று அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்பாளரை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
 
அப்போது அவர் பேசியதாவது: சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டு விட்டு எண்ணத்தைப் பார்த்து வாக்களியுங்கள் என்றார்.
 
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்த 40 தொகுதிகளில் 10 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் வேட்பாளர்களும் போட்டியிட உள்ளனர்.
 
அதன்படி, நாம் தமிழர் கட்சியின் சார்பில், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
மக்களவை தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 40 வேட்பாளர்களில் 15 பேர் மருத்துவர்கள் ஆவர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments