விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் 55வது பிறந்த தினத்தையொட்டி கரூர் அருகே தினந்தோறும் 55 பேருக்கு இலவசமாக ஏழை, எளியவர்களுக்கு அக்கட்சியின் மாநில துணை செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி வா.மு.கதிரவன் பால் விநியோகம் செய்து வருகிறார்.
கரூர் அருகே வேலாயுதம்பாளையம் காந்திநகர் பகுதியில் குடியிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் வா.மு.கதிரவன், தன்னுடைய கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனின் 55வது பிறந்த தினம் வருகின்ற 17 ம் தேதி வர உள்ளதையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் மாலை நேரங்களில் 55 குடும்பங்களுக்கு இலவசமாக பால் விநியோகித்து வருகின்றார்.
இந்த இலவச பால் விநியோகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாள்தோறும் கூட்டம், கூட்டமாக குவியும் நிலையில் நாள்தோறும் 255 பேருக்கு பால் விநியோகித்து வருகின்றார்.
மாவட்ட செயலாளர் ஜெயராமன் தொடக்கி வைத்த இந்நிகழ்ச்சியில் நாள்தோறும், ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆங்காங்கே கட்சித்தலைவர் மற்றும் ரசிகர் மன்றங்கள் என்ற பெயரில் பிளக்ஸ் மற்றும் கட் அவுட்டர்களுக்கு பால் அபிஷேகம் நடத்தி வரும் நிலையில், ஏழை, எளிய மக்கள் தன்னுடைய தலைவரின் பிறந்த தினத்திற்காக இலவசமாக பால் விநியோகித்து வரும் இவரது செயல் கரூர் மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் பிற மாவட்டங்களிலும் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த பால் விநியோகித்தினை தமிழக அரசு, அங்காடி மூலமாக ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கதிரவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் மு.தமிழ்மணி, மோகன்ராஜ், சி.சேகரன், இளங்கோவன், செல்வராஜ், சமத்துவ சந்தானம், துரைசெந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - சி. ஆனந்தகுமார்