திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகளில் ஒன்றாகிய விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி குறித்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை சமீபத்தில் நடத்தியது. முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது
இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் தனிச்சின்னத்தில் போட்டி ஆகிய நிபந்தனைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வைத்துள்ளதாகவும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது
ஆனால் திமுக தரப்பில் இருந்து இந்த இரண்டுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளதால் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்குமா அல்லது திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்