Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரம்; சூர்யா மீது வழக்கு தொடர்ந்த வன்னியர் சங்கம்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (11:46 IST)
ஜெய்பீம் பட சர்ச்சை விவகாரத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது.

அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் படத்தில் இடம்பெற்றிருந்த கருத்துகள் குறித்த தனது வருத்தங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments