Publish Date: Tue, 24 Aug 2021 (19:57 IST)
Updated Date: Tue, 24 Aug 2021 (19:58 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600க்குள் குறைந்து விட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்படும் என்று அறிவித்தது
இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டது. ஆனால் முறையான அறிவிப்பு வராததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மட்டும் திறக்கப்படாமல் இருந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து இணை இயக்குனர் காஞ்சனா அவர்கள் கூறியபோது கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பார்வையாளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்