ஈரோட்டில் பாஜக சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த வந்த வானதி சீனிவாசனை போராட்டக்காரர்கள் துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று மாலை பிறப்பித்தது.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை மாநிலம் முழுவதும் நடத்த குறிப்பாக அலங்காநல்லூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆளும் அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுன. ஆனால், போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் வரும்வரை தங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என தீர்க்கமாக அறிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோட்டில் பாஜக சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சியில் ஈடுபட முயன்றனர். இதை துவக்கிவைக்க வானதி சீனிவாசன் வந்தார். இதை அறிந்த போராட்டக்காரர்கள் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, ’தமிழகத்தை புறகனிக்கும் பாஜக வேண்டாம்’ என முழக்கமிட்டு துரத்தியடித்து உள்ளனர்.