Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் திட்டங்கள்தான் தமிழக பட்ஜெட்? – வானதி சீனிவாசன் கருத்து!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (14:54 IST)
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆண்டு பட்ஜெட் பிரதமர் மோடியின் திட்டங்களை போல உள்ளதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராகன் பட்ஜெட் உரையை வாசித்தார்.

கல்வி, விவசாயம், சுகாதாரம், மருத்துவம் என பல துறைகளுக்கும் நிதி ஒதுக்கியும், பல புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியும் பட்ஜெட் உரை இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்களுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். பல்வேறு மேம்பாட்டு அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக ஆண்டு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாட்டின் பட்ஜெட் அறிவிப்புகள் பிரதமர் மோடி வெளியிட்ட திட்டங்களை தமிழ்ப்படுத்தியது போல உள்ளதாக கூறியுள்ளார். இதே திட்டங்களைதான் பிரதமர் மோடி தேசிய அளவில் செயல்படுத்தி வருகிறார் என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments