Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர்களைவிட அதிகாரம் உள்ளவர் உதயநிதிதான்: வானதி சீனிவாசன்

Advertiesment
Vanathi
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (17:52 IST)
அமைச்சர்களை விட உதயநிதி தான் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் சேவை மையத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாமை இன்று வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அவர் பேசியபோது தமிழகத்தில் அமைச்சர்களை விடவும் அதிகாரம் மிக்கவராக இருப்பது உதயநிதி தான் என்றும் சட்டசபையில் முதல்வருக்கு வணக்கம் வைப்பதைவிட உதயநிதிக்கு முதலில் அமைச்சர்கள் வணக்கம் தெரிவிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் கோவை மக்களின் குறைகளை கமல்ஹாசன் கேட்டு உள்ளார் என்றும் அதற்கு என்னுடைய பாராட்டுக்கள் என்றும் ஆனால் கோவை மக்களின் மனுவை வாங்கி விட்டு அவர் பிக் பாஸுக்கு சென்று விடுகிறார் என்றும் மக்களுக்கு களத்தில் இறங்கி சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கமல்ஹாசன் உதயநிதிக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார் என்றும் புதிய படம் சம்பந்தமாக அவர் உதயநிதியுடன் பேசும்போது கோவை தெற்கு தொகுதி பற்றியும் பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை!