Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிதின் கட்காரி, சவுஹான் நீக்கம்: பாஜகவில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு புதிய பதவி!

Advertiesment
Vanathi
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (08:01 IST)
பாஜக பிரபலம் மற்றும் கோவை தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பா.ஜ.க. ஆட்சி மன்றக்குழுவில் இருந்து கட்காரி, சவுகான் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 பாஜக ஆட்சிமன்றக் குழுவில் இருந்து நிதின் கட்காரி மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் புதிய ஆட்சி மன்ற குழுவில் 6 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன 
புதிய ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, இக்பால் சிங் லால்புரா, மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால், கே. லட்சுமன், சுதா யாதவ் மற்றும் சத்யநாராயண் ஜாட்டியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.  2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த அதிரடி மாற்றம் நடைபெற்று உள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளை வினியோகிப்பது இந்தியா தான்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்