அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டுவது கட்டுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோயில் இருந்த இடத்தை இடித்துவிட்டு தான் மசூதி கட்டப்பட்டது என்றும் அதன் பிறகு சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் மீண்டும் ராமர் கோயில் அதே இடத்தில் கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
கோவில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் உதயநிதிக்கு ஒரே ஒரு பதிலை கூற வேண்டும் என்பதற்காக தான் இதை கூறுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்
தமிழக முதலமைச்சர் ராமர் கோவில் அழைப்பிதழை வாங்கவில்லை என்றும் ஆனால் அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் வானதி சீனிவாசன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.