Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வின் உடல் நிலை பற்றி வளர்மதி என்ன சொல்கிறார் தெரியுமா?

ஜெ.வின் உடல் நிலை பற்றி வளர்மதி என்ன சொல்கிறார் தெரியுமா?

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (14:58 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜெயலலிதாவின் உடல் நிலை விபரத்தை அறிய அப்பல்லோ மருத்துவமனையின் வளாகத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அங்கு அவர்கள் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முதல்வரின் உடல் நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.
 
அவர் கூறும் போது “முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். மருத்துவமனையிலிருந்தே அவர் அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தல் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.  அவரின் நலம் விரும்பாத சிலர், பொறாமையின் காரணமாக அவரது உடல் நலம் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.. விமான சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்..!

விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழப்பு: முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும்: அண்ணாமலை..

வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் உயிரிழப்பு: சிகிச்சையில் 93 பேர்..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments