கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை: பூசி மொழுகும் வைத்திலிங்கம்??

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (12:36 IST)
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத்ன்தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் என சொல்லப்படுகிறது. 
 
இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே கூட சலசலப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு 5 மணிநேரம் நடந்தது எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் கலந்துக்கொண்ட  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், 
 
கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. தற்போதைய குழப்பத்தால் ஆட்சி கலையாது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ம் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு என மழுப்பல் பதிலை அளித்து சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

17 நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய கூடாது: இப்போது 18வது நாடும் அறிவிப்பு.. டிரம்ப் கடுமையான உத்தரவு..!

முக்கிய அமைச்சருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. பதவி இழப்பாரா?

தமிழ்நாட்டில் மட்டும் 1 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கமா? சென்னையில் மட்டும் 40 லட்சமா?

அடுத்த கட்டுரையில்
Show comments