Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தற்கொலை தீர்வல்ல ; வாழ்வுதான் தீர்வு - வைரமுத்து உருக்கம்

தற்கொலை தீர்வல்ல ; வாழ்வுதான் தீர்வு - வைரமுத்து உருக்கம்
, சனி, 2 செப்டம்பர் 2017 (17:57 IST)
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது. 


 

 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. 
 
இந்நிலையில், இதுபற்றி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
‘அடி பாவி மகளே’ என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன. ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
 
மொத்தம் மரணம் மூன்று வகை.
 
இயல்பான மரணம்-அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு;
 
இன்னொன்று கொலை-அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு;
 
மூன்றாவது தற்கொலை-அது மனிதன் சமூகத்தின் மீது காட்டும் எதிர்ப்பு.
 
அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது?
 
தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது? தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மி நோட் 4 ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்!!