Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா? வைரமுத்து கேள்வி!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:41 IST)
இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் காணொளி வகுப்பில் பல்வேறு இந்திய மாநிலங்களை சேர்ந்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பேசியவர்கள் இந்தியில் பேசியதால், இந்தி தங்களுக்கு தெரியாது என்றும் எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசுமாறும் சிலர் கேட்டதாக கூறப்படுகிறது.
 
அதற்கு இந்தி தெரியாதவர்கள் தாராளமாக வெளியேறலாம் என அவர்கள் பதிலளித்ததாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயல்பாட்டிற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக்கொள்ள போகிறோம்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்துவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தி அறியாதார் யோகா பயிற்சியிலிருந்து வெளியேறலாம் என்று இந்திய அமைச்சகச் செயலாளர் அவமதித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. யோகா இந்திக்கு மட்டுமே சொந்தமா அல்லது இந்தியாவுக்கு இந்தி மட்டுமே சொந்தமா என்ற கேள்விகள் இதயத்தில் அறைவதை நிறுத்துங்கள் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments